Sunday, February 22, 2009

உடன்பிறப்பே துணிந்து வா !!!

இது என்ன கொடுமை! மைக் என்னும் நமது சகோதரன் கேள்வி கேட்கிறான் அதுவும் யாரை பார்த்து? கலைஞரை பார்த்து! அதையும் சகித்து கொண்டு நம் வலையுலகில் இருக்கும் கலைஞர் வழிவந்த உடன்பிறப்பு, சாலிசம்பர், லக்கிலுக்,அபிஅப்பா, எல்லோரும் இருக்க காரணம் என்ன? அதுவும் தலைவர் ஆஸ்பத்திரியிலே வலியால் துடிக்கும் போது இதற்கு பதில் சொல்லாமல் அப்படி என்ன அஞ்சலி பதிவை தயார் செய்து கொண்டிருக்கின்றீர்களா?

தலைவர் பலபேருக்கு தன்னை எதிர்த்த அத்தனை பேருக்கும் சமாதி கட்டிய வரலாறு உங்களுக்கு மறந்து விட்டதா? நீங்க விளக்க பதிவு போட்டால் உங்களை "கலைஞரின் அடிவருடி" என சொல்கின்றார்களா? ஆமாம் அது தானே உண்மை. அது போல அவர்கள் என்ன பொதுவான ஆசாமிகளா? நீ யாருக்குடா அடிவருடி என் திருப்பி கேட்க உங்களுக்கு தெரியாதா?

இல்லை யார் பூனைக்கு மணி கட்டுவது என யோசனையா? இதற்கும் மேல் உடன்பிறப்புகளே உங்களுக்கு சூடு சொரனை இருந்தால் அந்த மனநோயாளிகளுக்கு பதில் சொல்லுங்கள். இல்லை எனில் உங்கள் திமுக உறுப்பினர் அட்டையை உன் பொக்கிஷத்தை கூவத்தில் வீசி விட்டு கட்டுமரம் நோக்கி போய் எதாவது செய். ஆனால் திமுகவில் இருந்து கொண்டு கலைஞரை திட்டி உனக்கும் உன் பதிவுகளுக்கும் ஹிட் வாங்கி கொண்டிருக்காதே!

அவரின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் படுக்கையில் படுத்து கொண்டு பாலம் திறந்து கொண்டு இருக்கின்றார். பார்த்த என் கண்ணில் ரத்தம் வருகின்றது. உனக்கு வரவில்லையா என் உடன்பிறப்பே!

நம்மை எதிர்த்து கேள்வி கேட்ட எவனையாவது நாம் விட்டு வைத்தது உண்டா? ஜனநாயக ரீதியில் எதிர்கொண்டு பதில் சொன்னதில்லையா? உனக்கு பயமா? எந்த காலத்தில் நீ பயந்தாய் சொல் உடன்பிறப்பே! இதோ நான் பூனைக்கு மணி கட்டுகிறேன்! நண்பர் மைக் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்கிறேன்!


1) தமிழகத்தில் உங்கள் வாக்கு வங்கி 10 சதவீதம் குறைந்ததிற்கு காரணம் காங்கிரஸ் என்று தெரிந்தும், இன்னும் ஏன் அதனுடன் கூட்டு வைத்துள்ளிர்களே ஏன்?

அய்யா, இது எங்கள் உள்நாட்டு விவகாரம், நீங்கள் ஏன் அதற்கு கவலை படுகின்றீர்! அப்படி கவலைப்பட்டால் கர்நாடககாரன் காவிரியில் தண்ணீர் தராத போதும், ஒக்கேனக்கல் பிரச்சனையின் போதும், கிருஷ்ணா நதிநீர் பிரச்சனையின் போதும் ஒரு குரல் கொடுத்ததுண்டா? கேட்டா அது உங்கள் உள் நாட்டு பிரச்சனை என்பீர்கள்! ஆகவே எங்களுக்கு தெரியும் எங்கள் தமிழன் எப்படி நிம்மதியாக வாழவேண்டும் வாழ வைக்க வேண்டும் என!



2) சகோதர யுத்தம் அப்படின்னா ஸ்டாலினுக்கு, அழகிரிக்கும் நடந்ததே அதுவா.

இல்லை மாத்தையாவுக்கும் பிரபாகரனுக்கும் நடந்ததே அது தான். உமாமகேஸ்வரனுக்கும் உங்கள் இயக்கத்துக்கும் நடந்ததே அதான். அமிர்தலிங்கம் vs பிரபாகரன் அதான், இப்படியாக பல சொல்லலாம். குடும்ப பிரச்சனைக்கும் சகோதர யுத்தத்துக்கும் வேறுபாடு உண்டு அய்யா!



3) அடுத்த முறை ஆட்சிக்கு வரவேண்டும் என்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கிறதா?

ஏன் அது சம்மந்தமாக நீங்கள் எந்த விதத்தில் உதவி செய்வதாக உத்தேசம்?



4) ஒரு உண்மை தமிழன் சீமானை பிடிப்பதில் உள்ள உங்கள் வீரம், ஏன் தமிழின அழிவை காப்பதில் இல்லை?

யார் சொன்னது உணர்சிபூர்வ முடிவெடுப்பது தமிழன் வேலை இல்லை அறிவு பூர்வமாக முடிவெடுப்பது தான் எங்கள் நோக்கம். தமிழின அழிவுக்கு காரணமே நீங்கள் தான் என நாங்கள் வயிறு எரிந்து கொண்டு இருக்கின்றோம். எங்கள் மீது அனாவசியமாக பழி சுமத்த வேண்டாம்.



5) ஒரு வேளை ஜெ. நேருக்கு, நேர் சந்தித்தால் என்ன பேசி கொள்வீர்கள்(2 பேரும் ஒன்னுதான், நீ தமிழனுக்கு எதிரி, நான் துரோகி சிங்கா,சிங்கிச்ச்சா அப்படின்னு ஒரு கோலாட்டம் ஆடுவிங்களா)

உங்கள் நக்கல் சிரிக்கும் படி இல்லை. நாங்கள் ஏன் செயலலிதாவை சந்திக்க வேண்டும்? உங்களையே கடைசி வரை நம்பி இருந்த மக்களை மூளை சலவை செய்து கேடயமாக நாங்களா பயன் படுத்துகின்றோம். அப்படி பார்த்தால் யார் துரோகி?


6) முத்துகுமாரின் தியாகத்தை கொச்சை படுத்த எப்படி உங்களால் முடிகிறது, மனசாட்சியை எங்கு அடகு வைத்திருக்கிர்கள்?

யார் கொச்சை படுத்தியது. இன்றைக்கு என் உடன்பிறப்பு எரிந்து செத்து போனான். ஆனால் அவன் அழகாக 4 வரியில் எழுதிய கடிதம் இன்னும் ரத்தம் வருகின்றது எங்கள் நெஞ்சில்! அவன் அவனுடைய தலைவனுக்கு எழுதின நான்கு வரி நறுக்குன்னு இருந்தது. யாரையாவது அதிலே குறை சொல்லியிருக்கானா? அவன் உணர்வை அழகாக சொல்லிவிட்டு போய்விட்டான் பாவிமகன்! எங்களுக்கு கொச்சை படுத்த வேண்டிய அவசியம் இல்லை யாரையும்!


7) திமுக குடும்ப அரசியல் இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு தொடரும். இது மெகா, மெகா சீரியலா?

திமுக என்பது எங்கள் குடும்பம்.நாங்கள் உறுப்பினர்கள் இருக்கும் வரை வாழையடி வாழையாக தொடரும் பல ஆயிரம் ஆண்டுகள்.


8) தமிழர்கள் ஒவ்வொரு நாளும் நூற்றுகணக்கில் ஈழத்தில் இலங்கை அரசின் வன்முறையால் செத்து மடிவது, தெரியுமா?

நன்றாக தெரியும். அதன் காரணகர்த்தாக்கலையும் நன்றாக தெரியும்.தடுக்க நடவடிக்கை எடுக்கும் போதெல்லாம் நீங்கள் தான் தடுப்பு சுவராக இருக்கின்றீர்கள்.


9) தமிழர்களை காக்க அரசியல் கட்சியாக நீங்கள் முயற்சி எடுப்பதை விட்டு, நீங்களே மக்களிடம் போய் நியாயம் கேட்கிறிர்கள், இது என்ன நியாயம் கலைஞர் சார். மக்கள் எல்லாம் தெளிவாத்தான் இருக்காங்க. நீங்கள் தெளிவு அடைவது எப்போது.?

நாங்கள் தெளிவாகத்தான் இருக்கின்றோம். இதில் உள்ள சில விஷயங்களை நாங்கள் உங்களிடம் விளக்க தேவை இல்லை.


10) தமிழர்களின் மேல் எப்போது வெறுப்பு வரத்துவங்கியது?

தவறு. நீங்கள் உங்கள் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்வி இது!

13 comments:

Anonymous said...

:(

Anonymous said...

:D

Anonymous said...

//அவரின் நிலை என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் படுக்கையில் படுத்து கொண்டு பாலம் திறந்து கொண்டு இருக்கின்றார். பார்த்த என் கண்ணில் ரத்தம் வருகின்றது. உனக்கு வரவில்லையா என் உடன்பிறப்பே//

திரு.சூரியன் அவர்களே
நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க .ஒங்க தலைவருக்கு இப்போ உடம்புக்கு முடியல ன்னு இப்போ எந்த உண்மையான தமிழன் கவலைபட்டான் .சொல்லுங்க.சும்மா உண்மை நிலவரம் புரியாம பேசாதிங்க.அவர யாருங்க மருத்துவமனை ல இர்ருந்திகிட்டு பாலம் திறக்க சொன்னா ?.இது ஒரு புழு பூச்சி மாதரி அற்ப விஷயம் .அவரு போடுற நாடகத்தை இந்த தமிழர்கள் நல்லாவே உணர்ந்துகொண்டு விட்டார்கள் .இது அந்த கால முரசொலி காலம் இல்லை.உடன்பிறப்பே ன்னு ஏமாற்றி காலம் தள்ள.இனி அவருக்கும் அவரு குடும்பத்துக்கும் ஒரு முடிவுரை எழுத வேண்டிய காலம்.
மானம் கெட்ட ஏமாளி தமிழனாய் எனிமேலும் இருக்காதிங்க .ஒரு கொள்ளைகார குடும்பத்துக்கு துணை போகாதிங்க .
இந்த தமிழ் சமுதாயத்தை வாழ விடுங்க.நெஞ்சில் கொஞ்சம் இரக்கம் இருந்தா ஈழத்தில் மடியும் நம்முடைய தமிழர்களுக்காக ஒரு சொட்ட்டு கண்ணேர் விடுங்க.

uma ,thailand

Anonymous said...

திரு.சூரியன் அவர்களே
நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க .ஒங்க தலைவருக்கு இப்போ உடம்புக்கு முடியல ன்னு இப்போ எந்த உண்மையான தமிழன் கவலைபட்டான் .சொல்லுங்க.சும்மா உண்மை நிலவரம் புரியாம பேசாதிங்க.அவர யாருங்க மருத்துவமனை ல இர்ருந்திகிட்டு பாலம் திறக்க சொன்னா ?.இது ஒரு புழு பூச்சி மாதரி அற்ப விஷயம் .அவரு போடுற நாடகத்தை இந்த தமிழர்கள் நல்லாவே உணர்ந்துகொண்டு விட்டார்கள் .இது அந்த கால முரசொலி காலம் இல்லை.உடன்பிறப்பே ன்னு ஏமாற்றி காலம் தள்ள.இனி அவருக்கும் அவரு குடும்பத்துக்கும் ஒரு முடிவுரை எழுத வேண்டிய காலம்.
மானம் கெட்ட ஏமாளி தமிழனாய் எனிமேலும் இருக்காதிங்க .ஒரு கொள்ளைகார குடும்பத்துக்கு துணை போகாதிங்க .
இந்த தமிழ் சமுதாயத்தை வாழ விடுங்க.நெஞ்சில் கொஞ்சம் இரக்கம் இருந்தா ஈழத்தில் மடியும் நம்முடைய தமிழர்களுக்காக ஒரு சொட்ட்டு கண்ணேர் விடுங்க.
uma

paldurai said...

திரு.சூரியன் அவர்களே
நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க .ஒங்க தலைவருக்கு இப்போ உடம்புக்கு முடியல ன்னு இப்போ எந்த உண்மையான தமிழன் கவலைபட்டான் .சொல்லுங்க.சும்மா உண்மை நிலவரம் புரியாம பேசாதிங்க.அவர யாருங்க மருத்துவமனை ல இர்ருந்திகிட்டு பாலம் திறக்க சொன்னா ?.இது ஒரு புழு பூச்சி மாதரி அற்ப விஷயம் .அவரு போடுற நாடகத்தை இந்த தமிழர்கள் நல்லாவே உணர்ந்துகொண்டு விட்டார்கள் .இது அந்த கால முரசொலி காலம் இல்லை.உடன்பிறப்பே ன்னு ஏமாற்றி காலம் தள்ள.இனி அவருக்கும் அவரு குடும்பத்துக்கும் ஒரு முடிவுரை எழுத வேண்டிய காலம்.
மானம் கெட்ட ஏமாளி தமிழனாய் எனிமேலும் இருக்காதிங்க .ஒரு கொள்ளைகார குடும்பத்துக்கு துணை போகாதிங்க .
இந்த தமிழ் சமுதாயத்தை வாழ விடுங்க.நெஞ்சில் கொஞ்சம் இரக்கம் இருந்தா ஈழத்தில் மடியும் நம்முடைய தமிழர்களுக்காக ஒரு சொட்ட்டு கண்ணேர் விடுங்க.

உமா தாய்லாந்து

சூரியன் - தி பாஸ் said...

##திரு.சூரியன் அவர்களே
நீங்க எந்த உலகத்துல இருக்கீங்க .ஒங்க தலைவருக்கு இப்போ உடம்புக்கு முடியல ன்னு இப்போ எந்த உண்மையான தமிழன் ##

அய்யா அனானி! நீங்க இருப்பதோ 20 லட்சம் அதிகபட்சமா போனா, அதிலே வலை எழுதுவது அதாவது கலைஞரை திட்டி எழுதுவது 200 பேர், ஆக உங்களுக்கு உலகமே அதானா? நீங்க எப்ப முழிச்சு இந்த உலகம் பார்க்க போறீங்க! நோ ச்சான்ஸ்!

\\உடன்பிறப்பே ன்னு ஏமாற்றி காலம் தள்ள.இனி அவருக்கும் அவரு குடும்பத்துக்கும் ஒரு முடிவுரை எழுத வேண்டிய காலம்.\\

ஹி ஹி உங்க வேலையை பாருக்க இதையே நான் திருப்பி சொன்னா? என்ன ஆகும். பிரபாகரனை நம்பாதே அனானின்னு சொன்னா உன் ரத்தம் கொதிக்குதுல்ல அது மாதிரி தான் எங்க 2 கோடி பேருக்கும்!உனக்கு உன் தலைவன் எனக்கு என் தலைவன், ஆனா பாரு அனானி உங்க 20 லட்சம் பேர் தலைவனை சொன்னா இத்தனை கோவம் வருதே நாங்க 2 கோடி பேர் இருக்கோம் என்ன செய்வதா உத்தேசம்?

Anonymous said...

என்னடா மயிரு இது?

களத்தில் முன்னணியில் இருக்கும்போது ஒரு மயிரானும் வேணாம்.நாங்களே ஈழத்தை மீட்டெடுப்போம்னீங்க.

இன்னிக்கு டப்பா டான்ஸ் ஆடும்போது மட்டும் இளிச்சவாயன் கருணாநிதியா?

சூரியன் - தி பாஸ் said...

உமா தாய்லாந்து என்னும் சகோதரி எழுதியது என தெரியுது!

தங்கையே! உன் மன கஷ்டம் புரியுது! என்ன செய்ய நீங்க எல்லாம் நல்லா மாட்டிக்கிட்டீங்க! நான் என்ன செய்ய முடியும்?

ஆனா ரொம்ப நாகரீகமா இருக்கு உங்க வார்த்தைகள் நன்றி!

Anonymous said...

உங்களுக்கு வேற வேலையே இல்லையா? மைக் மாதிரி மன நோயாளிக்கு எல்லாம் என்ன பதில் வேண்டி இருக்கு? அவன் கேட்டிருப்பது எல்லாம் கேள்விகளா? சொன்னா தான் தெரியுது. அவனுங்க தோல்வி பயத்துல உளறிட்டு இருக்கானுங்க. இன்னும் கொஞ்ச நாள்ல தேசிய கொலைவர் டவுசர் கிழியப் போகுது. அதனால இவனுங்க இங்க அலறிட்டு இருக்கானுங்க. அந்த கொலைவன் அழிந்தால் தான் ஈழத்து சகோதர சகோதரிகள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள். சம் சகோதர்களை கேடயங்களாக பயன் படுத்தி சிங்கள இன வெறியர்களுக்கு தான் கொஞ்சமும் சளைத்தவன் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறான். அந்த மைக் மாதிரி மனநோயாளிகளை பொருட்படுத்த வேண்டாம். விரைவில் தேசிய கொலைவன் வீழ்வான். ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கும்.

சூரியன் - தி பாஸ் said...

அனானி அய்யா!
\\\உங்களுக்கு வேற வேலையே இல்லையா? மைக் மாதிரி மன நோயாளிக்கு எல்லாம் என்ன பதில் வேண்டி இருக்கு? \\

ஒருவரின் ஊனத்தை பற்றி நாம் தரகுறைவாக பேச என்னால் அனுமதிக்க முடியாது! நானே ஒரு கோவத்தில் சொன்னேன். அதை நீங்களும் பிடித்டு தொங்குவது எனக்கு அசிங்கமாக இருக்கு!

\\அவனுங்க தோல்வி பயத்துல உளறிட்டு இருக்கானுங்க\\

ஆமாம் ஆனா என்ன செய்வது! எனக்கு தெரிந்து சில வெளிநாட்டில் வசிக்கும் சம்பாதிக்கும் அட்களை அவர்கள் கப்பம் கட்ட சொல்லி கட்டாதவர்களை இயக்கத்தில் சேர்த்து ..... அய்யோ அந்த கொடுமை எல்லாம் விடுங்க!நாம் ஏன் அது பத்தி எல்லாம் பேசனும்!

\\ஈழத் தமிழ் மக்கள் வாழ்வில் அனைத்து சந்தோஷங்களும் கிடைக்கும்.
\\

நாம் அதற்க்காக பிரார்திப்போம்:-((

சாலிசம்பர் said...

சூரியன் ,
நீங்க உடன்பிறப்பா,இல்லை உடன் அறுப்பா?என்று புரியவில்லை.மைக்கின் துயரத்தை உணராமல் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளது.

சூரியன் - தி பாஸ் said...

## சாலிசம்பர் said...
சூரியன் ,
நீங்க உடன்பிறப்பா,இல்லை உடன் அறுப்பா?என்று புரியவில்லை.மைக்கின் துயரத்தை உணராமல் வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளது##

வாங்க சலிசம்பர்! நீங்க கூடவா இப்படி? என்னால் நம்ப முடியவில்லை! நான் எந்த காலத்தில் ஈழதமிழர் உயிர் பற்றி அலட்சியப்படுத்தினேன்! ஆனால் என் தலைவன் அசிங்கப்படுத்தப்படுத்த ப்படும் போது நான் என்ன சும்மா இருக்க முடியுமா?

Anonymous said...

very good very good!