Wednesday, February 20, 2008

ஒரு திருமண அறிவிப்பு!!!



நாகை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தனது 60 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்த ஜெயலலிதா நேற்று மாலை திருக்கடையூர் வந்தார்.

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் 24ம் தேதி 60 வது பிறந்த நாள். அவரது நட்சத்திரத்தின் படி நேற்று இரவு பிறந்த நாள். இதற்காக, அவரது தோழி சசிகலாவுடன் நேற்று மதியம் 1.30 மணிக்கு சென்னையி இருந்து கார் மூலம் புறப்பட்டவர் நேற்று மாலை 6.30 மணிக்கு திருக்கடையூர் அருகே உள்ள பிள்ளை பெருமாள் ‘எல் அண்ட் டி’ விருந்தினர் மாளிகைக்கு வந்தார். ஒரு மணி நேர ஓய்வுக்கு பின் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் வாசலில் கணேச குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். சிவாச்சாரியார்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த பூமாலையை சசிகலாவுக்கும், சசிகலாவுக்கு அளித்த பூ மாலையை ஜெயலலிதாவும் அணிந்து கொண்டனர். சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், மகாதேவன் தவிர கட்சி நிர்வாகிகள் உட்பட அனைவருக்கும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. நேற்று இரவு 7.45 மணிக்கு கோவிலுக்கு வந்த ஜெயலலிதா இரவு 8.45 மணி வரை கோவிலில் இருந்தார். ஒரு மணி நேரத்துக்கு பிறகு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டு சென்று தங்கினார்.
நன்றி: தினமலர்
திஸ்கி: தங்கத்தாரகை பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே அமுக்கவும்.