Friday, January 30, 2009

ஏண்டா எழவு கூட்டுறீங்க!!!

ஏண்டா எழவு கூட்டுறீங்க! அந்த முத்துகுமாரோ எவனோ தன் தாய் தந்தையை கூட மதிக்காம குடும்பம்ன்னா என்னன்னு தெரியாத நாய்! செத்த பிணம் கூட அவன் அம்மா அப்பா ஊர் போகவில்லை. அவன் சொந்த பிரச்சனை என்னன்னே தெரிய வில்லை. இன்னும் 1 வாரம் ஆகும் அதல்லாம் தெரிய.

அவன் எழுதி ஏதாவது பத்திரிக்கையிலே ஏதாவது கட்டுரை வந்ததா! இல்லை தனியா ஏதாவது வலைப்பூ இருக்கா! அவன் வேலை பார்த்தது ஒரு பத்திரிக்கை ஆபீஸ். அதுவும் மருத்துவர் கொய்யாவோட பொண்ணு ஆபீஸ்ல.

அவன் தன் கடைசி அறிக்கை (அது என்னடா ஆளாளுக்கு அறிக்கை விட ஆரம்பிசுட்டீங்க) அதிலே கூட மருத்துவர் கொய்யா பத்தி ஏதும் இல்லை, திருமாவளவன் பத்தி ஏதும் இல்லை, வீரமணி பத்தி ஏதும் இல்லை, அனாதை ஆனந்தன் சைக்கோ பத்தி ஏதும் இல்லை, நெடுமரம் பத்தி இல்லை, ஆனா குறிப்பா கலைஞரை பத்தி இருக்கு.

எலேய் எலேய் எவன ஏமாத்த பாக்குறீங்க! நீங்களே கூடி கூடி பேசிகிறீங்க, என்னன்னவோ திடீர் திடீர்ன்னு முடிவெடுத்துட்டு பேப்பர்க்கு போஸ் கொடுக்குறீங்க.

இப்ப பார்த்தா எல்லாரும் எழவு ஊட்டுக்கு போய் தீவாளி கொண்டாடிகிட்டு இருக்கீங்க. எல்லாருக்கும் ஒரு சந்தேகம்டா, நீங்க எவனாவது தான் இந்த அனாதை முத்துவை எரிச்சிடீங்களோன்னு.

முத்துகுமார் செத்தது(அதாவது தானா செத்திருந்தா) அது ஒரு கோழை செய்யும் வேலை. ஏன்னா அவன் இத்தனை வயது வரை வாழ்ந்த போது அவன் வார்டிலே ஒரு நாள் குப்பை கூட்டி இருப்பானா?

அவன் பிறந்த தமிழகத்துக்கு இது வரை அவன் செஞ்ச நல்லது என்ன? நல்லது செய்ய வேண்டாம், அட்லீஸ்ட் ஆதங்க ப்பட்டுஎங்கயாவது ஒரு கட்டுரை எழுதியிருக்கானா?


போங்கடா போங்கடா கலைஞரை திட்ட அடுத்த வழியை பாருங்க! சைக்கோவை போட்டு எரிங்க! இன்னும் திட்ட நல்ல வழி கிடைக்கும்!

Friday, January 9, 2009

கிளிநொச்சி வீழ்ந்தது ஒரு துன்பியல் சம்பவம்!!!

1992 இரண்டு கட்ட தேர்தல் நடக்கின்றது நம் தமிழ்நாட்டில்! அது வாழ்வோ சாவோ போராட்டம் தமிழனுக்கு, ஏனனில் MGR இல்லை அப்போது. அவர் இல்லா ஒரு தேர்தல். அவர் இருந்து ஒரு தேர்தல் நடந்தால் அது வேறு. ஆனால் அப்போதோ கலைஞரோ, செயலிதாவோ என்கிற நிலை. செயலலிதா வந்துவிட்டால் என்ன ஆகும் தமிழகமே சுடுகாடாகும் நிலை! அந்த நேரத்தில் கொல்லப்படுவது ராஜீவ்!

விளைவு 1992-96 அராஜக ஆட்சி! ஒரு இருண்ட ஆட்சி தமிழகத்தில்!சசிகலாவின் ஆட்சி! அதை விவரிக்க நான் இங்கே வரவில்லை!

ஆக தமிழகத்தில் அப்போது ஜெயலாலிதாவின் ஆட்சியை கொண்டு வந்தது புலிகள்!

அதன் பிறகு எத்தனையோ கஷ்டப்பட்டு திரும்பவும் ஆட்சிக்கு வரவேண்டிய நிலை!

அதல்லாம் போகட்டும், இன்றைய நிலையில்................

புலிகள் ஒவ்வொறு இடமாக இழந்து கொண்டிருப்பது மிகவும் வருந்த தக்க நிகழ்வு! காரணம் அடிப்படையாக என்ன? அன்று அந்த கோர கொலை நடந்ததுதானே!

இந்தியாவும் இப்போது கண்டு கொள்ள வில்லை! கலைஞரும் கண்டு கொள்ளவில்லை என்று குமுறும் முன்னே கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டியது தானே!

அன்றைக்கு தன் பிறந்த நாள் வசூல் தொகை கொடுத்த கலைஞர் வேண்டாம்.ஆனால் இன்று கலைஞர் வேண்டும் என்றால் புலிகளே என்ன அர்த்தம். ஆக பதவியில் இருப்பவர் ஆதரவு உங்களுக்கு வேண்டும் என்று தானே!

அதனால் தானே "பதவி" என்கிற விஷயம் வேண்டிகிடக்கு எல்லோருக்கும். இதே கலைஞர் எதிர் கட்சியாக இருந்தால் இத்தனை முக்கியத்துவம் கொடுத்து இருப்பீர்களா நீங்கள்?

உங்கள் வலைகுஞ்சுகள் எத்தனை எத்தனை கீழ்த்தரமாக கலைஞரை அவரின் வயதையும் பாராமல் திட்டி தீர்க்கின்றன! அது எந்த அளவு உங்களை உங்கள் அரசியலை பாதிக்கும் என உங்களுக்கு தெரியும் அல்லவா? அநியாயமாக இந்திய அரசியல் கொலை செய்ததினால், செய்துவிட்டு சும்மா இருந்திருக்கலாம் அதனை "இது ஒரு துன்பியல் சம்பவம்" என சொல்லி மேலும் இந்தியன் மனதில் எரியும் நெருப்பில் நெருப்பை அள்ளி கொட்டினீர்களே, அதை கூட விட்டு விடலாம். ஆனால் இப்போது கலைஞரை திட்டி தீர்ப்பது எந்த விதத்தில் நியாயம். ஆக இதை எல்லாம் சரி செய்ய முடிவது கலைஞர் என மட்டுமே ஏன் நீங்க எல்லாரும் நினைக்கிறீர்கள் அதனால் தான் அந்த திட்டு திட்டுகிறீர்கள்.

எல்லோருமே திட்டுவது கலைஞர் பதவி ஆசை பட்டவர் என்பதை தானே! அதிலும் ஒரு பதிவர் "பிஜேபிக்கு ஓட்டு போட விளம்பரம் கொடுத்தாரே! சரியென்றே வைத்து கொள்வோம்! சரி இந்தியாவுக்கு என்ன கோவம் "தான் தேடப்படும் குற்றவாளிக்கு அந்த தமிழீழ தலைவர் பதவி கிடைக்க கூடாது" என்பதாகத்தானே இருக்கும். அதனால் "தமிழீழம்" மட்டுமே தனது கொள்கை என இருக்கும் தலைவர் ஏன் "நான் இந்திய விசாரனைக்கு கட்டுபடுகிறேன்!அங்கே வந்து சரணடைகிறேன், ஆனால் அதற்கு முன் ஒரே நிபந்தனை, எனக்கு நான் சரணடையும் தேதியும் தமிழீழம் உண்டாகும் தேதியும் ஒரே நாளாக இருக்க வேண்டும்" என ஏன் அறிவிக்க கூடாது??? அப்போது ஒத்து கொள்கிறோம் "பதவி" என்கிற வார்த்தைக்கு உள்ள சக்தியை பற்றி.

இந்திய அமைதிப்படை உள்ளே நுழைந்த சம்பவம் பற்றியும் அப்போது புலிகள் ஆயுதங்கள் ஒப்படைத்ததும் பற்றி தனியாக விவாதிக்கலாம். அப்போது கூட தி.மு.க அதை ஆதரிக்கவில்லை. அந்த படை திரும்பிய போது வரவேற்கவில்லை என்பதும் உண்மை!


ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எங்கள் சகோதரர்கள் என்பது அடுத்த விஷயம். இந்தியா என்பது எங்கள் தாய் என்பது முதல் விஷயம்! எங்கள் இந்திய தலைவன் பரிதாபமாக செத்த போது நீங்கள் சொன்ன வார்த்தை தான் இப்போது சொல்ல முடிகின்றது எங்களாலும் "கிளி நொச்சி இழப்பு என்பது ஒரு துன்பியல் சம்பவம்" என்று!