சொந்தமாகவே அறுவை சிகிச்சை செய்யும் ஒரு முயற்சி இது!
கலைஞருக்கு பின்பு திமுகவின் நிலை என்னவாக இருக்கும், யார் தலைமைக்கு சரியான ஆள் ஸ்டாலினா, அழகிரியா, கனிமொழியா, துரைமுருகனா, பொன்முடியா என்றெல்லாம் ஆராயும் முன்பாக கலைஞர் குடும்ப உருப்பினருக்கா அல்லது வெளியாருக்கா என பாத்தோமானால் கண்டிப்பாக கலைஞர் குடும்ப ஆட்களுக்கே தலைமை பதவி என்பது வெட்ட வெளிச்சம். கலைஞர் "இதென்ன காஞ்சி மடமா ஜனநாயக முறையில் தான் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்றி அடிக்கடி சொல்வது போல இல்லை நிலமை. அப்படியெனில் யார் தகுதியான ஆள் என ஆராயும் முன்பாக நாம் கலைஞர் - மாறன் இவர்களை ஒப்பீடு செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
மாறன் தன் கடைசி மூச்சு வரை திராவிடத்தில் இருந்து பின்வாங்கவேயில்லை. ஆனால் கலைஞர் மஞ்சள் துண்டு விஷயம் வரை இன்னும் பல சர்ச்சைகளை வைத்துகொண்டுதானிருக்கிறார். ஜாதீய வட்டம் என்று பார்த்தால் அதிலும் மாறனுக்கு தான் முதலிடம். தன் மகன் கலாநிதிக்கு கர்நாடகாவை சேர்ந்த கௌடா இனத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கினார். தயாநிதிக்கோ பிராமண இனத்தில் பெண் எடுத்தார். மகள் அன்புகரசிக்கோ ஒரு படி மேலே போய் இஸ்லாமிய மருமகனை தேர்ந்தெடுத்தார்.
ஆனால் கலைஞரோ தன் பிள்ளைகளுக்கு மு.க.முத்துக்கு தன் இனமான இசைவேளாளர் சமூகத்திலே பெண் எடுத்தார். அதுபோல ஸ்டாலினுக்கும், தமிழரசுவுக்கும். மகள் செல்விக்கும் தன் சாதியிலேயே தேடி கொடுத்தார். அது தான் போகட்டும் என்றால் தன் மூண்றாவது மனைவி ராஜாத்தி அம்மாள் நாடார் இனம் என்பதால் நாடார் பையன் தான் தன் பெண்ணுக்கு வேண்டும் என ராஜாத்தி அம்மாளின் பிடிவாதமான விருப்பத்தை மகிழ்வோடு நிறைவேற்றினார். அதற்காகவே அப்போது அதிமுக வில் இருந்த ஆலடி அருணாவை திமுகவுக்கு கொண்டு வந்து அவரை விட்டு அதிபன் போஸ் என்ற் மாபெறும் பணக்கார நாடார் மாப்பிள்ளையை தன் மகள் கனிமொழிக்கு திருமணம் ம்உடித்து வைத்தார். ஆலடி அருணாவின் பணியை மெச்சி அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். ஆனால் ஒரு MP சீட் தரவில்லை என்பதற்காக கலைஞர் முகத்திலே கரி பூசினார் ஆலடி அருணா. ஆனாலும் ராஜாத்தி அம்மாளின் நாடார் பற்று இப்போது அருணாவின் மகள் பூங்கோதையை அமைச்சராக ஆக்கியிருக்கிறது. தவறி போய் மு.க அழகிரி மாத்திரம் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அதன் பின்புலம் என்னவென்று தெரியவில்லை! ஆக சாதீய வட்டத்தில் கூட மாறனே கலைஞரை விட உயரத்தில் இருக்கிறார்.
சரி இருவரின் வாரிசுகள் பற்றி ஒப்பிட்டோமானால், மாறன் அவர்களது மூத்த மகன் கலாநிதி MBA பட்டதாரி. அமரிக்காவில் படித்தவர். சும்மா ஒப்புக்கு படிக்காமல் தான் படித்தத்தன் பலன் வழியாக இன்று மீடியா உலகில் சக்கை போடு போட்டு கோடிகளில் வாழ்கிறார். தனக்கு தம் தொழிலில் யாருக்குமே ஈடாக இல்லாமல் மிக உயரத்தில் இருக்கிறார்.
தயாநிதி மாறன் BA மட்டுமே படித்திருந்தும் சில சர்ட்டிபிகேட் படிப்புகள் வெளி நாட்டில் படித்து இருந்தும் தன் அண்ணன் கலாநிதிக்கு துணையாக வியாபாரத்தில் இருந்தார். பின்பு அவருக்கான வாய்ப்பு வந்த போது ஒரு மத்திய மந்திரியாக 3 வருடங்கள் Talk of India வாக இருந்தார். 45000 கோடிகள் இவரால் இந்தியாவுக்கு லாபம்.
மகள் அன்புக்கரசியோ மருத்துவத்தில் முதுகலை பயின்றவர். பின்பு ராமச்சந்திராவிலும் அப்பல்லோவிலும் பணியாற்றி இப்போது அமரிக்காவில் பணியாற்றுகிறார்.
இப்படியாக மாறன் அவர்களின் வாரிசுகள் இண்டலக்சுவல் பிரிவின் கீழ் வருகின்றனர். அது போல் அவர்களது தனிமனித ஒழுக்கமும் அருமையானது. ஆனால் கலைஞரின் வாரிசுகள் எப்படி என்று பார்த்தால் மு.க முத்து ஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்க்கு உதாரணம். அவருக்கு வாய்ப்புகள் தாராளமாக வழங்கப்பட்டது. ஆனால் எதையுமே அவர் பயன் படுத்திக்க முன்வரவில்லை. அடுத்து அவருக்கு மிகவும் பிடித்த அவரின் தம்பி மு.க அழகிரி ஒரு நொட்டோரியஸ் ஆக பிரபலமாகி இருக்கிறார். அவரும் கல்லூரியில் கால் வைக்கவில்லை. மு.க. தமிழரசுன்னு ஒருத்தர் இருப்பதே யாருக்கும் தெரியாது. கலைஞரின் சட்ட மன்ற உருப்பினர் அலுவலகத்தில் சும்மா உட்காந்து இருப்பார். மத்தபடி பெருசா சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஆனா மகள் செல்வி மட்டுமே கலைஞரின் சரியான வாரிசுன்னு சொல்லனும். அவருடைய புத்திசாலித்தனம் செல்விக்கு மட்டுமே உண்டு. ஆனாலும் செல்வியும் செல்வத்தின்(முரசொலி மாறன் அவர்களின் தம்பி)கரம் பிடித்ததால் செல்வியின் புத்திசாலிதனங்கள் மாறன் குடும்பத்துக்கே போகின்றது.
தளபதி மு.க ஸ்டாலின் தத்திகுத்தி BA படித்திருந்தாலும் அவருடைய இளமை காலத்தில் கொஞ்சமும் சோபிக்கவில்லை. அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது மேயராக. அட பரவாயில்லியே தளபதியின் நிர்வாகம் என்று பாராட்ட வைத்தது. அப்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அதனால் சென்னை மாநகராட்சிக்கு போதுமான ஆதரவு இருந்தது தமிழக அரசிடம் இருந்து. ஆனால் ஜெயலலிதா ஆட்சியின் போது தளபதியால் மேயராக சுத்தமாக செயல்படவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் மேயர் பதவியே பறி போனது. அதனால் விளங்குவது என்னவெனில் ராஜா வீட்டு கண்ணுகுட்டியா இருந்தா செயல்படுவேன் இல்லாவிடில் என்னால முடியாதுன்னு அர்த்தமா? கனிமொழி ஆஹா ஓஹோன்னு சொல்லிகிறாங்க. ஆங்கில அறிவும் சரி புரியாத கவிதை எழுதும் திறனும் சரி, சும்மா பெண்ணீயம் பேசுவதும் சரி ஆனா எப்போ புருஷன் வீட்டுல ஒரு மருமகளா நடந்துக்க போறாங்கன்னு தெரியலை. தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஏதாவது ஒரு சாதியை சார்ந்தே இருக்கின்றன. ஆனால் திமுகவுக்கு மட்டும் அந்த கெட்ட பெயர் இதுவரை இல்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசம் அந்த நல்ல பெயரை அநேகமாக கெடுக்கலாம்.
ஆக அடுத்த தலைமை என்னும் போட்டிக்கு இருப்பது தளபதியும் தயாநிதி மாறனும் மாத்திரமே. சரி இந்த இருவரில் யார் என பார்த்தால்.....
வைகோவுக்கும் தளபதிக்கும் பிரச்சனை ஏற்பட்டு பின் வைகோ விலகிய போது மேடைக்கு மேடை தளபதியை விமர்சித்த போது தளபதி அதை சரியான கோணத்தில் எதிர்க்காமல் எதிர்க தெரியாமல் மற்ற இரண்டாம் கட்ட தலைவர்களே தளபதியை காப்பாற்ற வேண்டி இருந்தது. ஆனால் தயாநிதியோ கடந்த தேர்தல் சமயத்தில் வைகோ வை ஒரு காமடியனாக ஆக்கி இனி அரசியல் எதிர்காலமே வைகோவிற்கு இல்லாமல் செய்து சாதனை படைத்தார். டாடாவை மிரட்டுகிறார் என வைகோ சொன்னதுமே அவர் மேல் வழக்கு தொடர்கிறார். டாடாவை தன்வீட்டுக்கு வரவழைத்து பேசி வைகோ முகத்திலே கரி பூசுகிறார்.
தனக்கு மத்திய மந்திரி பதவி கிடைத்ததும் தன்னை விட மூத்த அமைச்சரான TR பாலு, இராசா போன்றவர்களை சுலபமாக பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு அலட்சியமாக வந்து அமர்ந்தார். நெடுஞ்செழியன்/சம்பத்/மதியழகனை பின்னுக்கு தள்ளி கலைஞர் வந்து முதல் இடத்துக்கு வந்த அதே திறமை தயாநிதிக்கு இருந்தது. ஆனால் தளபதிக்கு துரைமுருகனை பின்னுக்கு தள்ளுவதே ரொம்ப சிரமமாக இருக்கின்றது.
ஆக கட்சியின் நன்மை கருதி தயாநிதியை மீண்டும் கட்சியில் பழைய நிலைக்கு கொண்டு வந்து கட்சியை பாதுகாக்க வேண்டும்! இது கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கருத்து! (ரொம்ப பேராசை தொண்டர்களா இருக்காங்கப்பா!